தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியியல் நடைபெற்றது.
பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்புடன் ஆலிமா படிப்பையும் இணைத்துப் படிக்கும் இறுதியாண்டு மாணவிகளுக்கு இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது.
மான்டேசரி மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிக்கூடம் துவங்கும் கல்வி ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
14 ஆண்டுகளாக இடைவிடாமல் நடைபெறும் இப்பயிலரங்கின் வாயிலாக இதுவரையிலும் 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் மற்றும் பள்ளி கல்லூரிப் பாடங்கள் இணைக்கப்பட்ட 5 அரபு மதரஸாக்களும் துவங்கப்பட்டுள்ளன.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும். அதற்கு ஆதாரமாக இரண்டு கல்வியையும் இணைத்துப் படித்த ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.