





ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி ஆகிய நிறுவனங்களின் புதிய மாணவிகளுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆன்மிகப் பயிற்சியையும் இஸ்லாமியப் பண்பாட்டையும் இன்றைய கல்லூரி கல்வியுடன் இணைத்து கற்றுக்கொள்ளும் பெண் பிள்ளைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் தனித்திறன் கொண்டவர்களாகவும் உம்மத்தின் அறிவுச் சொத்தாகவும் மாறிப் போவார்கள்.
இந்த தொலைநோக்கு இலக்குடைய கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முன்னோடியாக நிற்கிறது.