அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் “மகளிர் தொழில்முனைவு மற்றும் அதிகாரமளித்தல்” (STATE LEVEL CONFERENCE ON WOMEN ENTREPRENEURSHIP AND EMPOWERMENT) என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தொழில் செய்யும் ஆர்வமுள்ள மகளிருக்கு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் வாய்ப்புகளை நிபுணத்துவம் மிக்க 4 வல்லுநர்கள் மிகத் துல்லியமாக கவனப்படுத்தினர்.
அரசு கலை அறிவியல் கல்லூரி – பேராவூரணி
வெங்கடேஸ்வரா கல்லூரி – பேராவூரணி
காதர் முஹைதீன் கல்லூரி – அதிராம்பட்டினம்
அரசு கலை அறிவியல் கல்லூரி – அறந்தாங்கி
உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் சுமார் 80 மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
பெண்களிடம் உழைப்பையும் பொருளீட்டலையும் வலியுறுத்தி அவர்களை அதிகாரப்படுத்தும் கருதரங்கமாக இது அமைந்திருந்தது.