நமது கல்லூரியின் NSS மாணவிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமது கல்லூரியின் NSS மாணவிகள் , மணமேல்குடி சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற JOSH (Joint Squad for Health) சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவிகள் உடல்நலம், சுகாதாரப் பாதுகாப்பு, காசநோய் (TB) தடுப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளையும் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் மாணவிகளிடையே சமூகப் பொறுப்புணர்வு, சுகாதார அக்கறை மற்றும் சேவை மனப்பான்மை மேலும் வளர்ந்தது.

மாணவிகளின் சிறப்பான பங்கேற்பைப் பாராட்டும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. M. Aruna, I.A.S. அவர்கள் மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *