






ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி {Alumnae Meet 2026} மார்ச் 31 அன்று நடைபெற்றது.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றுச் சென்றுள்ள ஆலிமாக்களும் முபல்லிஹாக்களும் திருமணம் குழந்தைகள் குடும்பப் பொறுப்புகள் வாழ்க்கைச் சுமைகள் உள்ளிட்ட அழுத்தமான பொறுப்புகளுடன் சேர்த்து….
நிஸ்வான் மதரஸா உஸ்தாதாக்களாக பள்ளிக்கூட ஆசிரியர்களாக கல்லூரிப் பேராசிரியர்களாக கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளாக உளவியல் ஆலோசகர்களாக ஊட்டச்சத்து நிபுணர்களாக அரசுப் பணியாளர்களாக….. இப்படி
தாங்கள் கற்ற கல்வி மற்றும் பண்பாட்டின் மூலம் பல்வேறு பயனுள்ள துறைகளில் ஆளுமை செலுத்தி வருவதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள். அது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
என்ன நோக்கத்திற்காக அன்னை கதீஜா கல்லூரி உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறி வருவதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி உங்களின் அறிவு மற்றும் ஆன்மிகப் பண்பாட்டின் தாய் வீடு என்பதையும்,நீங்கள் உலகின் எங்கு வாழ்ந்தாலும் உங்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு கல்லூரி என்றென்றும் எல்லா வகையிலும் துணை நிற்கும் என்பதையும் மீண்டும் ஒருமுறை அவர்களின் உள்ளங்களில் பதியவைத்து அனுப்பிய நிகழ்வாக இந்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி இருந்தது.