தாருஸ்ஸலாம் இஸ்லாமிய பள்ளியின் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்

நமது தாருஸ்ஸலாம் இஸ்லாமிய பள்ளியின் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக 15/03/2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. ஆரம்பமாக மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.இஸ்லாமிய வரலாற்றை தெளிவாக கற்று வரும் இம்மாணவிகள் உமைய்யா பேரரசு, அப்பாசிய பேரரசு, உதுமானிய பேரரசு மற்றும் முகலாயப் பேரரசு என நான்கு அணியாக பிரிந்து தங்களுடைய அணிவகுப்பையும் உடற்பயிற்சி Read more

மண்ணும் மரபும் – 2023

நம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ் ஸலாம் பள்ளி இணைந்து நடத்திய “மண்ணும் மரபும் ” என்ற நிகழ்ச்சி 13.02.2023 திங்கட்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுகள்,வாழ்வியல் முறை,கடல் வாணிபம், வரலாற்று ஆய்வுகள்,பாரம்பரிய மருத்துவம்,பழங்கால சந்தை முறை,கைவினைப் பொருட்கள்,பொம்மலாட்டம்,நாட்டுப் புறப்பாட்டு, நாற்று நடுதல், தற்காப்புக் கலைகள் Read more

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம்

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பெண் கல்வியாளர்ளை உருவாக்கும் இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளும்,இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்கும் ஆர்வமுடையவர்களும், இரண்டு கல்வியும் இணைந்த அரபு மதரஸாக்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் உலமாக்கள் சிலரும் கலந்து கொண்டனர். தமிழக முஸ்லிம் சமூகத்தின் Read more

முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி (ALUMNAE MEET – 2023) ஜன. 26 அன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியில் பயின்ற ஆலிமா பட்டதாரிகள் பலர் அடுத்தடுத்து மேற்படிப்பு படித்து பள்ளி கல்லூரிகளின் ஆசிரியைகளாக பெண்கள் மதரஸாக்களின் ஆலிமாக்களாக தமிழகம் Read more

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம் – 2023

ஒவ்வொரு முஹல்லாவிலும் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கில் கல்விப் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான 11 ஆவது மூன்று நாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களும், 3 அரபு மதரஸாக்களும் உருவாவதற்கு இந்த Read more

உலக அரபு மொழி தின விழா

நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக அரபு மொழி தின விழா 20/12/2022 அன்று மூன்றாம் ஆண்டு மாணவிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. அரபு மொழியை நாம் கற்பதின் அவசியம், அதன் வரலாறு மற்றும் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்களை மாணவிகள் குறுநாடகங்கள், உரைகள் என பல்வேறு வகையில் விளக்கினர். Read more

Nutrition & Dietetics துறை முதலிடம்

156 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் Nutrition & Dietetics துறை முதலிடம் பிடித்துள்ளது.  மூன்றாண்டுகள் முபல்லிஹா படிப்புடன் N&D படித்து முதலிடம் பிடித்துள்ள அதிராம்பட்டினம் மாணவி நூருல் ஸபீலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வரலாறு கணிதம் கணினிஅறிவியல் ஆகியத் Read more

உலக மனநல நாள் சிறப்பு நிகழ்ச்சி

நமது கல்லூரியின் உளவியல் பிரிவு மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த உலக மனநல நாள் சிறப்பு நிகழ்ச்சி 21/10/22 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் பேரா.மன்சூர் அலி அவர்கள் ” இஸ்லாம் கூறும் மனநலம் ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பயம்,பதற்றம்,மனஅழுத்தம்,மனபிறழ்ச்சி,போதை,சமூக வலை தள Read more

ஆலிமா/ முபல்லிகா பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

மார்க்க கல்வியையும் உலக கல்வியையும் ஒருங்கிணைத்துப் பயின்ற பெண் கல்வியாளர்களை உருவாக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி மாணவிகளுக்கான ஆலிமா/ முபல்லிகா பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனும் இரு பெரும் விழாக்கள் கடந்த 30/07/2022 அன்று சிறப்பாக Read more

75 வது சுதந்திர தின விழா

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி சார்பாக 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மாணவிகளின் அணிவகுப்புக்குப் பின்னர் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை கல்பனா கலா அவர்கள் தேசிய கொடியேற்றினார். மாணவிகள் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை நிகழ்த்திக் காட்டினர். கல்லூரியின் Read more