தாருஸ்ஸலாம் இஸ்லாமிய பள்ளியின் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்

நமது தாருஸ்ஸலாம் இஸ்லாமிய பள்ளியின் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக 15/03/2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

ஆரம்பமாக மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.இஸ்லாமிய வரலாற்றை தெளிவாக கற்று வரும் இம்மாணவிகள் உமைய்யா பேரரசு, அப்பாசிய பேரரசு, உதுமானிய பேரரசு மற்றும் முகலாயப் பேரரசு என நான்கு அணியாக பிரிந்து தங்களுடைய அணிவகுப்பையும் உடற்பயிற்சி சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேரா. M.A. தஸ்லீமா (ஆங்கிலத்துறை தலைவர், காதர் முகைதீன் கல்லூரி,அதிராம்பட்டினம்) அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

இறுதியாக பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!