நம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ் ஸலாம் பள்ளி இணைந்து நடத்திய “மண்ணும் மரபும் ” என்ற நிகழ்ச்சி 13.02.2023 திங்கட்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாரம்பரிய விளையாட்டுகள்,வாழ்வியல் முறை,கடல் வாணிபம், வரலாற்று ஆய்வுகள்,பாரம்பரிய மருத்துவம்,பழங்கால சந்தை முறை,கைவினைப் பொருட்கள்,பொம்மலாட்டம்,நாட்டுப் புறப்பாட்டு, நாற்று நடுதல், தற்காப்புக் கலைகள் என்று இந்த தலைமுறைக்கு பிள்ளைகளுக்கு அறிமுகமில்லாத தமிழர்களின் மரபு வாழ்வியல் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.












ஒரே தட்டில் அமர்ந்து உணவு உண்ணும் சகன் சாப்பாடு முறையில் மதிய உணவு மாணவிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரி மைதானத்தில் மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி இருபத்தி மூன்று பிரிவாக மண் பானையில் பொங்கல் சமைத்து மகிழ்ந்தார்கள்.
மாலையில் தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியர் கலைவளர்மணி முனைவர் கு.மதுரை சந்திரன் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களில் மனிதநேய சிந்தனைகள் என்ற தலைப்பில் மிக அருமையான சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
மரபுக்கல்வி இணைந்த நவீன கல்வியே தமிழர்களின் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கும்.