அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி (ALUMNAE MEET – 2023) ஜன. 26 அன்று நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியில் பயின்ற ஆலிமா பட்டதாரிகள் பலர் அடுத்தடுத்து மேற்படிப்பு படித்து பள்ளி கல்லூரிகளின் ஆசிரியைகளாக பெண்கள் மதரஸாக்களின் ஆலிமாக்களாக தமிழகம் முழுவதும் பணியாற்றி வருவதை இந்நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தனர்.
கல்வியில் மிகச்சரியான இலக்கும், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பொறுமையும் உறுதியும் இருந்தால் நம் கண்முன்னே மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மாணவிகள் ஒரு முன்னுதாரணம்.
வந்திருந்த முன்னாள் மாணவிகளுக்கு மரபு சார்ந்த பல புத்தாக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் அனைவரும் சகன் சாப்பாட்டில் ஒன்றுகூடி மதிய உணவு உண்டது சிறப்பானதாக இருந்தது.