இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம் – 2023

ஒவ்வொரு முஹல்லாவிலும் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கில் கல்விப் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான 11 ஆவது மூன்று நாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களும், 3 அரபு மதரஸாக்களும் உருவாவதற்கு இந்த பயிலரங்கம் பங்காற்றியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 6,7,8 ஆகியத் தேதிகளில் இந்த மூன்றுநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

👉 ஆலிமா மற்றும் பட்டதாரி பெண்களில் தங்களை கல்வியாளர்களாக தரம் உயர்த்திக் கொள்ளும்  ஆர்வமுள்ளவர்கள்…

👉 பள்ளிவாசல் வளாகத்தில் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட அரபு மதரஸாவை உருவாக்கிடும் ஆர்வமுள்ள ஜமாஅத்தார்கள் மற்றும் உலமாக்கள்….. 

👉 ஒரு நவீன இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை  உருவாக்கும் ஆர்வமுள்ளவர்கள்…

ஆகியோர் இந்த மூன்றுநாள் பயிலரங்கில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

முன்பதிவு கட்டாயம்.