இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம் – 2024

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கில் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 11 ஆண்டுகளாக இந்த மூன்றுநாள் பயிலரங்கத்தை நடத்தி வருகிறது. இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்திட தேவையான அனைத்து விதமான பயிற்சிகளையும் Read more

6 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்

நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 6 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக 16/03/2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. ஆரம்பமாக மணவிகளின் கல்விசார் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் மாணவிகள் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு பிரிவாக தங்களை அடையாளப்படுத்தி மரங்களை பாதுகாத்தல்,மலைகளை பாதுகாத்தல், விவசாயத்தின் அவசியம் Read more

தாருஸ்ஸலாம் இஸ்லாமிய பள்ளியின் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்

நமது தாருஸ்ஸலாம் இஸ்லாமிய பள்ளியின் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக 15/03/2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. ஆரம்பமாக மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.இஸ்லாமிய வரலாற்றை தெளிவாக கற்று வரும் இம்மாணவிகள் உமைய்யா பேரரசு, அப்பாசிய பேரரசு, உதுமானிய பேரரசு மற்றும் முகலாயப் பேரரசு என நான்கு அணியாக பிரிந்து தங்களுடைய அணிவகுப்பையும் உடற்பயிற்சி Read more

மண்ணும் மரபும் – 2023

நம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ் ஸலாம் பள்ளி இணைந்து நடத்திய “மண்ணும் மரபும் ” என்ற நிகழ்ச்சி 13.02.2023 திங்கட்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுகள்,வாழ்வியல் முறை,கடல் வாணிபம், வரலாற்று ஆய்வுகள்,பாரம்பரிய மருத்துவம்,பழங்கால சந்தை முறை,கைவினைப் பொருட்கள்,பொம்மலாட்டம்,நாட்டுப் புறப்பாட்டு, நாற்று நடுதல், தற்காப்புக் கலைகள் Read more

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம்

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பெண் கல்வியாளர்ளை உருவாக்கும் இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளும்,இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்கும் ஆர்வமுடையவர்களும், இரண்டு கல்வியும் இணைந்த அரபு மதரஸாக்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் உலமாக்கள் சிலரும் கலந்து கொண்டனர். தமிழக முஸ்லிம் சமூகத்தின் Read more

முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி (ALUMNAE MEET – 2023) ஜன. 26 அன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியில் பயின்ற ஆலிமா பட்டதாரிகள் பலர் அடுத்தடுத்து மேற்படிப்பு படித்து பள்ளி கல்லூரிகளின் ஆசிரியைகளாக பெண்கள் மதரஸாக்களின் ஆலிமாக்களாக தமிழகம் Read more

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம் – 2023

ஒவ்வொரு முஹல்லாவிலும் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கில் கல்விப் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான 11 ஆவது மூன்று நாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களும், 3 அரபு மதரஸாக்களும் உருவாவதற்கு இந்த Read more