நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக அரபு மொழி தின விழா 20/12/2022 அன்று மூன்றாம் ஆண்டு மாணவிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. அரபு மொழியை நாம் கற்பதின் அவசியம், அதன் வரலாறு மற்றும் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்களை மாணவிகள் குறுநாடகங்கள், உரைகள் என பல்வேறு வகையில் விளக்கினர். கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆண்டு மாணவிகள் இந்த நிகழ்ச்சியை மிகுந்த உற்சாகத்தோடு கண்டு பயன் பெற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் நூறு விழுக்காடு வருகை பதிவு செய்த மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வும் அதைத்தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக தாலுகா நிர்வாகம் சார்பில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மாணவிகளுக்கு முதல்வர் மற்றும் பேராசிரியைகள் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.