நமது கல்லூரியின் உளவியல் பிரிவு மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த உலக மனநல நாள் சிறப்பு நிகழ்ச்சி 21/10/22 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் பேரா.மன்சூர் அலி அவர்கள் ” இஸ்லாம் கூறும் மனநலம் ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பயம்,பதற்றம்,மனஅழுத்தம்,மனபிறழ்ச்சி,போதை,சமூக வலை தள பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உளவியல் சிக்கல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிகாட்டுதல்களை குறு நாடகங்கள்,காணொளிக் காட்சிகள், பாடல்கள் மற்றும் கண்காட்சி மூலம் மாணவிகள் விளக்கினர்.
மேலும் பலதரப்பட்ட உளவியல் சிகிச்சை முறைகளை மாணவிகள் செய்து காட்டினர். மேற்கத்திய உளவியலுடன் இஸ்லாமிய உளவியலையும் இணைத்து பல்வேறு கருத்துக்களை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதில் கல்லூரியின் அனைத்துத் துறை மாணவிகளும் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.