அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி சார்பாக 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி மாணவிகளின் அணிவகுப்புக்குப் பின்னர் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை கல்பனா கலா அவர்கள் தேசிய கொடியேற்றினார்.
மாணவிகள் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.
கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறு நாடகங்கள், பாடல்கள், மற்றும் கண்காட்சி ஆகியவற்றை மாணவிகள் கண்டு பயன்பெற்றனர்.
இறுதியாக இனிப்பு வழங்கப்பட்டு நாட்டுப்பண் இசைக்க விழா முடிவடைந்தது.






