முஸ்லிம் பெண்களை கல்வியாளர்களாக உருவாக்கும் இலக்குடன் இயங்கும் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 2022 – 23 கல்வியாண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.
அறிவுத்துறை வளர்ச்சியே முஸ்லிம் (மனித) சமூகத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறது.
மார்க்கத்தை, மரபை, கலாச்சாரத்தை சந்ததிகளுக்கு கடத்தும் பொறுப்பை சுமக்கும் பெண்களுக்கு பயனுள்ள கல்வியாக தேடித்தேடி பயிற்றுவிக்க வேண்டிய பெருங்கடப்பாடு பெற்றோர்களுக்கு இருக்கிறது.
அதற்காக தங்களது அறிவையும் நேரத்தையும் செல்வத்தையும் அதிகப்படியாக செலவிட வேண்டும்.
மூன்றாண்டு ஆலிமா படிப்புடன் ஒரு இளநிலை பட்டப் படிப்பையும் முடித்து மாணவிகளின் எதிர்கால இலக்காக கல்வித்துறையை நெஞ்சில் சுமக்கும் வகையில் அன்னை கதீஜா கல்லூரியின் பயிற்றுவிப்பு முறைகள் தொலைநோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.