WORLD MENTAL HEALTH DAY FUNCTION 2021

அன்னை கதீஜா அகாடமியின் உளவியல் துறை சார்பில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு 13/10/2021அன்று அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனநல ஆலோசகர் Mrs.Kurshid Begam MSW M.Sc அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அவருடன் சென்னை அஞ்சுமன் பள்ளியின் முன்னாள் முதல்வரும் சமூக ஆர்வலருமான Mrs.Shamshad Begam அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மனநலம் குறித்த பல்வேறு தகவல்களை மாணவிகள் அருமையான முறையில் காட்சிப் பொருட்கள் மூலம் சிறப்பாக விளக்கினர்.

மேலும் குறு நாடகங்கள்,உரைகள் மூலம் மனநலம் சார் வாழ்வின் அவசியத்தை எடுத்துக் கூறியது அவர்களின் சமூகம் சார்ந்த அக்கறையையும் உணர்த்துவதாக அமைந்தது.

இம்மாணவிகள் பல்கலைக்கழக உளவியல் பாடத்துடன் இஸ்லாமிய உளவியல் பாடத்தையும் இணைத்துப் பயில்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் அனைத்து துறை மாணவிகளும் கண்காட்சி மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.