இறையருளால் எமது கல்லூரியில் தேசியக் கல்வி தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மாண்விகளும் பேராசிரியைகளும் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.மாணவிகள் மெளலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறு நாடகமாக நடித்துக் காட்டினர்.மேலும் கல்வியின் நோக்கம் பொருளை ஈட்டுவதா? அல்லது அறிவை அறிவை ஈட்டுவதா? எனும் தலைப்பில் விவாத அரங்குகள் உட்பட மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.சுமதி அவர்கள் கல்வியின் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து எமது அகாடமியின் தாளாளர்.பேரா.ஆலிமா.நஜ்மா அவர்கள் மாணவிகளை வாழ்த்திப் பேசி அவர்களுக்குப் புத்துணர்வு ஊட்டினார்.இவ்வாறாக நடைபெற்ற நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவுற்றது.
இறைவனுக்கே எல்லாப் புகழும்