அன்னை கதீஜா அகாடமி சார்பில் DARUS SALAAM SCHOOL OF ISLAMIC STUDIES FOR GIRLS என்ற இஸ்லாமியக் கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடம் கடந்த 2015 கல்வியாண்டு முதல் நடைபெற்று வருகிறது.
ஏழு ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் ஆகிய இரு வகையான கால அளவுகள் கொண்ட பாடத்திட்டங்கள் தாருஸ்ஸலாம் பள்ளியில் நடைபெற்று வருகின்றன.மாணவிகளின் நலன் கருதி மூன்று Admission Terminals ஏற்படுத்தப்பட்டுள்ளது.கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு பாடங்களுக்கான வகுப்புகள் நடத்தப்படும் ஆனால் தேர்வு எழுத மாட்டார்கள்.
முதலாவது :
5 ஆம் வகுப்பு முடித்த 11 வயது நிரம்பிய மாணவிகள் 7 ஆண்டுகள் மார்க்கல்வியுடன் மத்திய திறந்த நிலைப் பள்ளி வாரியத்தின் (NIOS) ஆங்கிலவழியில் 10,12 ம் வகுப்பு தேர்வு எழுதுவார்கள். English,Tamil,Home Science,Psychology& History ஆகிய ஐந்து பாடங்களில் மட்டுமே தேர்வு எழுதும் முறையில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் மார்க்க கல்வியை திறம்பட பயின்று ஆலிமா அல் ஸலாமியா என்ற பட்டத்துடன் வெளிவருவார்கள்.
இரண்டாவது :
7 ஆம் வகுப்பு முடித்த 13 வயது நிரம்பிய மாணவிகளுக்கு 5 ஆண்டுகள் மார்க்கக் கல்வியுடன் மத்திய திறந்த நிலைப்பள்ளி வாரியத்தின் (NIOS) ஆங்கில வழியில் 10,12 ம் வகுப்பு தேர்வு எழுதுவார்கள். English,Tamil,Home Science,Psychology& History ஆகிய ஐந்து பாடங்களில் மட்டுமே தேர்வு எழுதும் முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் மார்க்க கல்வியை திறம்பட பயின்று முபல்லிகா ஸலாமியா பட்டத்துடன் வெளிவருவார்கள்.
மூன்றாவது :
10 ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மார்க்க கல்வியுடன் மத்திய திறந்த நிலைப் பள்ளி வாரியத்தின் (NIOS) ஆங்கில வழியில்12 ம் வகுப்பு தேர்வு எழுதுவார்கள்.English,Tamil,Home Science,Psychology& History ஆகிய ஐந்து பாடங்களில் மட்டுமே தேர்வு எழுதும் முறையில் பயிற்சி அளிக்கப்படும்.மேலும் 3 ஆண்டுகள் மார்க்கக் கல்வியுடன் இளங்கலை பட்டப் படிப்பையும் முடித்து ஆலிமா அல் முபஷ்ஷிரா என்ற பட்டத்துடன் வெளிவருவார்கள்.