






நமது அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், 2026-2027 கல்வியாண்டிற்கான RRC மற்றும் YRC CLUB துவக்க விழா மற்றும் HIV மற்றும் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 18/08/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மணமேல்குடி அரசு மருத்துவமனை சார்பில்,
திரு. பொன். மாணிக்கம்
(Senior Treatment Supervisor,
Manamelkudy Block – Tuberculosis Department)
திருமதி. பிரேமிதா
(ICTC Counsellor,
Manamelkudy Government Hospital)
ஆகியோர் கலந்து கொண்டு, HIV மற்றும் காசநோய் பரவும் முறைகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், ஆரம்பகட்ட பரிசோதனையின் அவசியம் மற்றும் நோய் குறித்த தவறான நம்பிக்கைகளைத் தவிர்ப்பது போன்ற முக்கியமான தகவல்களை மாணவிகளுக்கு வழங்கினர்.
மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, ஆரோக்கியமான, விழிப்புணர்வு மிக்க மற்றும் நோயற்ற சமூகத்தை உருவாக்குவதில் தங்களது பங்களிப்பை வழங்குவோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
நமது கல்லூரியில் அமையப் பெற்றுள்ள RRC & YRC போன்ற மன்றங்கள் மூலம் மாணவிகளுக்கு கிடைக்கும் விழிப்புணர்வுகள், அவர்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கும் சமூக நலனுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.