மண்ணும் மரபும் – மறந்து போன தமிழர் பாரம்பரியத்தை மீட்ட நிகழ்ச்சி

கடந்த 07/01/2026 அன்று நம் கல்லூரி வளாகத்தில் மறைந்து போன தமிழர் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக மண்ணும் மரபும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் பண்பாடு மற்றும் மரபுகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவில் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பல்வேறு வகையான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
அந்த விளையாட்டுகள் மூலம் மாணவிகளிடையே ஒற்றுமையும் குழு உணர்வும் வளர்க்கப்பட்டது.
மேலும் பாரம்பரியத்தின் அடையாளமாக பொங்கல் வைத்து, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இதன் மூலம் பகிர்ந்து கொள்ளும் பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமை வலுப்பெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இலக்கிய சொற்பொழிவாளர், நாட்டுப்புற பாடகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்
கவிஞர் முத்தமிழ் முத்து வீர முருகேசன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவரது உரை மாணவிகளிடையே தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீது ஆழ்ந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு பண்பாட்டுச் செழுமையுடன் மண்ணும் மரபும் நிகழ்ச்சி அனைவரின் மனதிலும் நீங்கா நினைவாக அமைந்து இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *