பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லூரியின் அழைப்பை ஏற்று வரலாற்றுத் துறையின் ஆழ அகலங்களை அளந்த
இரண்டு ஜாம்பவான்கள் வருகை தந்து மாணவிகளை வாழ்த்தினார்கள்.

முனைவர் செயராமன்

மயிலாடுதுறை AVC கல்லூரியின் வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர்,
பொன் விளையும் தஞ்சை மண்ணை எரித்து சாம்பலாக்க முயலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தின் முகவரி.

இன்றைய அரசியல் கட்டமைப்பை கருத்தியல் ரீதியாக எதிர்த்து களத்தில் நிற்கும் போராளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பகிர்ந்து கொண்டார்.

ஆச்சரியமாக இருந்தது மறுமை வாழ்வில் நம்பிக்கை இல்லை.ஆனால் மண்ணிற்காக மக்களுக்காக வாழ்வு முழுவதும் தளராது போராடும் குணம் எங்கிருந்து வந்தது.
…………………………………………………………….

முனைவர் ராஜா முஹம்மது

தமிழக தொல்லியல் துறையின் துணை தலைவராக பணியாற்றியவர்

தமிழக முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மங்களைத் தேடி கடற்கரை பட்டினங்கள் முழுவதும் நடையாய் நடந்து தொகுப்பாக திரட்டி அதை புத்தகமாக அல்ல பொக்கிஷமாக வெளியிட்டவர்.

அந்த நூலின் மூலம் தமிழக முஸ்லிம்கள் கல்வியில் மட்டுமல்ல வணிகத்திலும் மீண்டும் முதல்நிலை பெற வேண்டும் என்ற வேட்கையை எங்களுக்குள் ஏற்படுத்தியவர்.
……………………………………………………………

வரலாறு தொல்லியல் அரசியல் பொருளாதாரம் தமிழ்த்தேசியம் சுற்றுச்சூழல் இலக்கியத்தமிழ் ஆங்கிலம் என்று இந்த நிகழ்ச்சி முழுவதும் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தது.