கடந்த 24-08-19 அன்று தமிழர் பாரம்பரிய விழா மண்ணும் மரபும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்,மருத்துவ முறைகள், தொழில் முறைகள், வாழ்வு முறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் தமிழர் வாழ்வு முறை விவசாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளும் மாணவிகளால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்,முதல்வர் பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு பங்கேற்று சிறப்பித்தனர்.