மண்ணும் மரபும் நிகழ்ச்சி

கடந்த 15/02/2025 அன்று இளம் தலைமுறையினருக்கு மறந்து போன தமிழர் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக நம் கல்லூரி வளாகத்தில் மண்ணும் மரபும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாணவிகள் பழங்குடி மக்களின் வாழ்வு முறை, தமிழர் திருமண முறைகள், பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்கள், பழங்கால உணவு முறைகள்,பழங்கால அரசியல் முறைகள் ,காப்பிய கதைகள் மூவேந்தர்களின் கோட்டைகள் என்ற தலைப்புகளில் கண்காட்சி அரங்கம் அமைத்திருந்தனர் .

இறுதியாக மண்ணையும் மரபையும் காப்பவர்கள் பெண்களே! மண்ணையும் மரபையும் காப்பவர்கள் ஆண்களே! என்ற தலைப்பில் பேராசிரியர்களின் பட்டிமன்றம் நடைபெற்றது.