6 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்

நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 6 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக 16/03/2023 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

ஆரம்பமாக மணவிகளின் கல்விசார் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் மாணவிகள் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு பிரிவாக தங்களை அடையாளப்படுத்தி மரங்களை பாதுகாத்தல்,மலைகளை பாதுகாத்தல், விவசாயத்தின் அவசியம் மற்றும் கடல் வளம் காத்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தங்கள் உடற்பயிற்சி சாகசங்கள் மூலம் விளக்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர்.M.சுமதி (உதவி பேராசிரியர்,கணிதத்துறை,காதர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்) அவர்கள் கலந்து சிறப்பு செய்தார்கள்.

கல்வியில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் நமது மாணவிகள் பல்வேறு உடற்பயிற்சி போட்டிகளிலும் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்று பல பரிசுகளை தட்டிச் சென்றது அனைவராலும் பாராட்டப்பட்டது.