ஆலிமா/ முபல்லிகா பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

மார்க்க கல்வியையும் உலக கல்வியையும் ஒருங்கிணைத்துப் பயின்ற பெண் கல்வியாளர்களை உருவாக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி மாணவிகளுக்கான ஆலிமா/ முபல்லிகா பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனும் இரு பெரும் விழாக்கள் கடந்த 30/07/2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.

காலை நிகழ்வாக நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவில் 212 மாணவிகள் பட்டம் பெற்றனர்.நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு நீதிபதி அ.முஹம்மது ஜியாவுதீன் ( மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி)கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

மதியம் 2:00 மணியளவில் அன்னை கதீஜா கல்லூரியின் இஸ்லாமிய துறைத் தலைவர் மெளலவி.முஹம்மது கான் பாகவி அவர்கள் தலைமையேற்றுத் துவங்கிய ஆலிமா முபல்லிகா பட்டமளிப்பு விழா ஆரம்பமானது.நிகழ்வில் 406 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்,வெளி மாநிலங்களிலிருந்தும் பெற்றோர்கள் உள்ளிட்ட சுமார் 5000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .அல்ஹம்துலில்லாஹ்