🔸இன்ஷா அல்லாஹ்…..இன்னும் 25 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி (Primary) முதல் ஆய்வுக்கல்வி (Ph.D) வரை அனைத்துப் படிப்புகளிலும் அதன் உட்பிரிவுகளிலும் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்🔸

🔸ISLAMIC SCHOOLING SYSTEM என்ற இஸ்லாமியப் பள்ளிக்கல்வி அமைப்பை அனைத்து சமூகமும் அங்கீகரிக்கும் நாட்டின் தலைசிறந்த பள்ளிக் கல்வி திட்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு தகுதியான திறமையான கல்விச் சிந்தனையாளர்களை கல்வித்துறை ஊழியர்களை முதலில் உருவாக்க வேண்டும்🔸

🔸தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பள்ளிக்கல்வி பிரிவு ” SEED ” (School Education Enhancement Division) மூலம் இன்றைய இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் சந்தித்து வரும் அனைத்து இடையூறுகளையும் களைவதற்கு அதன் ஒவ்வொரு பிரிவிற்கும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தன்னார்வ வல்லுநர்களை உருவாக்குவது🔸

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கடந்த 22 – 9 -2019 ஞாயிறு அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமியப் பள்ளிக் கூடங்களுக்கான கருத்தரங்கில் மேற்கண்ட தொலைநோக்கு கருத்துக்கள் விரிவாக அலசப்பட்டன.

ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் இஸ்லாமியப் பள்ளிகளை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 70 க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்ந்துலில்லாஹ்…….